பாடசாலைகளை முழுமையாக இயக்க கல்வி அமைச்சு அனுமதியளித்தது

மாணவர்களுடைய சமூக இடைவெளியை நடைமுறைத்தப்படுத்தக்கூடிய வகையில் வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டால், அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து தரங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 10 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும் 200 பேருக்கு அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சகல தரங்களுக்குமான கற்பித்தல் நடவடிக்கைகளை முழுமையாக நடத்த கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

 school kids

 

கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)ப் பரீட்சை பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2020

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)ப் பரீட்சை -2020 இற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் (PDF) ஆக தரவிறக்கம் செய்து,அச்சுப்பிரதி எடுத்து, விண்ணப்பதாரியினதும், கிராம சேவகரினதும் கையொப்பமிடப்பட்டு பரீட்சை திணைக்களத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி :-
மேற்படி பரீட்சைக்குத்; தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முனனர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

www.donets.lk என்ற இலங்கை பரீட்சைத்திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து விண்ணப்பபடிவங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

 z new350

 

Don't have an account yet? Register Now!

Sign in to your account