உயர்தரப் பரீட்சையை பிற்போட்டது ஏன்? கொழும்பு, யாழ் மாணவர்கள் கோரிக்கை

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 50.9 வீதமான மாணவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கேரிக்கை விடுத்துள்ளனர்.பரீட்சையை பிற்போட வேண்டாம் என 49.1 வீதமானவர்கள் போரிக்கை விடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் கொழும்பு,கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களில் நூற்றுக்கு 60 வீதமானோர் உயர்தர பரீட்சையை பிற்போட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அமைச்சின் இந்த ஆய்வு முடிவின் பின்னர் இரண்டு வாரங்களுக்கே பரீட்சையை பிற்போட முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டமையினால் பரீட்சைகளை 5 வாரங்களுக்கு பிற்போட தீர்மாளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்குள்ளேயே பரீட்சை முடிவுகளை வெளியிடும் நோக்கில் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

schoolkids11

உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்த கல்வியமைச்சு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி சற்று முன்னர் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்தாண்டு புலமைப்பபரீட்சையை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாணவர்களின் கோரிக்கை எனவும் கல்வி இராஜாங்;க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 schoolkids6

 

 

 

Don't have an account yet? Register Now!

Sign in to your account